Skip to main content
சற்று முன்

வேட்பாளர் தேர்வில் ஆளும் கட்சி குழப்பம்: களத்தில் இறங்கிய டிடிவி தினகரன், திமுக

வேட்பாளர் தேர்வில் ஆளும் கட்சி குழப்பம்: களத்தில் இறங்கிய டிடிவி தினகரன், திமுக

ttv3
விக்கி
Sr.Editor
Submitted by acoadio on 25 November 2017

ஆர்.கே.நகர் தேர்தல் அறிவித்த உடனேயே, மீண்டும் நான் போட்டியிடுவேன் என அறிவித்துவிட்டார் டிடிவி தினகரன். இன்று ஆலோசனை நடத்திய திமுகவும் மீண்டும் மருது கணேஷ் போட்டியிடுவார் என்று அறிவித்தவுடன் தேர்தல் களம் சூடாகியுள்ளது.

 

ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட தேர்தலில் ஓ.பி.எஸ். அணியில் மதுசூதனன் போட்டியிட்டார். இப்போது மதுசூதனனை வேட்பாளராக நிறுத்த வடசென்னை பகுதியில் உள்ள ராயபுரம் தொகுதி எம்எல்ஏவும், மீன்வளத்துறை அமைச்சருமான ஜெயக்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இரு அணிகள் ஒன்று சேர்ந்தாலும் மனங்கள் ஒன்று சேரவில்லை என்று மைத்ரேயன் கூறியுள்ள நிலையில் ஜெயக்குமாரின் எதிர்ப்பு மதுசூதனன் ஆதரவாளர்களை கோவப்பட வைத்துள்ளது. 

 

வேட்பாளர் தேர்வு குறித்து ஜெயக்குமார் செய்தியாளர்களிடம், “யார் வேட்பாளர் என்று இப்போது சொல்ல முடியாது. அதிமுக ஆட்சி மன்ற குழு கூடி ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து முடிவு செய்யப்படும்’’ என்று கூறினார். 

 

இரட்டை இலை சின்னம் தீர்ப்பு வருவதற்கு முன்பே, ஆர்.கே.நகர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் மதுசூதனனுக்கு பதில் இளைஞர் ஒருவரை களத்தில் இறக்குவோம் என்று கூறியிருந்தார் ஜெயக்குமார். அதற்கு மதுசூதனன் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். 

 

மதுசூதனனுக்கு வாய்ப்பு தரவில்லை என்றாலும் வாக்குகள் சிதறும், ஜெயக்குமார் சொன்ன வேட்பாளரை நிறுத்தவில்லை என்றாலும் வாக்குகள் சிதறும் என்பதால் வேட்பாளர் தேர்வினை சிக்கலின்றி மேற்கொள்ள வேண்டும் என்று அதிமுகவினர் கருதுகின்றனர்.