Skip to main content
சற்று முன்

மாநகராட்சி மேயரை மக்களே தேர்வு செய்ய மசோதா தாக்கல்! 

மாநகராட்சி மேயரை மக்களே தேர்வு செய்ய மசோதா தாக்கல்! 

Rippon building
விக்கி
Sr.Editor
Submitted by acoadio on 11 January 2018

மாநகராட்சி மேயரை மக்களே தேர்வு செய்ய மசோதா தாக்கல்! 
 


மாநகராட்சி மேயரை மீண்டும் மக்களே தேர்ந்தெடுக்கும் வகையிலான சட்ட மசோதா பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கடந்த 2016ம் ஆண்டு மேயர்களை, கவுன்சிலர்கள் மூலமாக மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படும் புதிய முறை கொண்டு வரப்பட்டது. சட்டப்பேரவையில் அதற்கான புதிய சட்டமும் இயற்றப்பட்டது. கவுன்சிலர்கள் பெரும்பான்மையாக யாருக்கு ஆதரவு தெரிவிக்கிறாரோ அதன் அடிப்படையில் மேயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் தற்போது மீண்டும் மாநகராட்சி மேயர்களை மக்களே தேர்ந்தெடுக்கும் முறை கொண்டு வரப்படுகிறது. அதற்கான சட்டமசோதாவை இன்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்த புதிய மசோதாவின் படி, மாநகராட்சி மட்டுமல்லாமல் பேரூராட்சி மற்றும் நகராட்சியின் தலைவர்களையும் மக்களே நேரடியாக தேர்வு செய்வர்.