Add1
logo
Logo
பொது அறிவு உலகம்
மிஸ் யுனிவர்ஸ் 2017
 ................................................................
அனைவருக்கும் நிறைவான மருத்துவ சேவை
 ................................................................
எல்லைகளை தாண்டும் இந்திய ரயில்வே
 ................................................................
டிஜிட்டல் மயம் : வானொலியும் தொலைக்காட்சியும்
 ................................................................
நிடி ஆயோக் புதிய செயல் திட்டம்
 ................................................................
சூரியன், வெள்ளி கிரக ஆய்வுக்கான இந்திய விண்கலம்
 ................................................................
வங்கித் துறையில் புதிய தொழில்நுட்பம்
 ................................................................
01-01-18*    2014 ஆகஸ்டில் பிரதமர் தமது சுதந்திரதின உரையில், பிரதம மந்திரிஜன் தன் யோஜனா திட்டத்தை அறிவித்தார். நாட்டில் உள்ள அனைத்துகுடும்பங்களையும் ஒருங்கிணைந்த நிதி சேர்தல் திட்டத்தில் சேர்ப்பதே அதன் நோக்கமாகும்.* 1969-இல் வங்கிகள் தேசியமயமாக்கத்தில் இருந்து நிதி சேர்தல் இலக்கை இந்தியாமேற்கொண்டது. முன்னுரிமை பிரிவினருக்கான கடன் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. பிராந்திய அளவில் கிராமப்புற வங்கிகள் உருவாக்கப்பட்டன. சேவைப் பிரிவு அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட்டது. சுய உதவிக்குழுக்கள் வங்கி இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டன.

ஆனால், தொழில்நுட்பத்தின் மூலமே நிதி சேர்தல் திட்டம் முழுமையடைந்தது.

*    இதன் மூலம், பூகோள ரீதியாக, தொலைதூரப் பகுதிகளுக்கும் இது விரிவுபடுத்தப்பட்டது. இந்த வங்கிப்பிரிவு தொழில்நுட்பம், கடந்த 3 ஆண்டுகளில் நாடு கண்ட மிக முக்கியமான மாற்றங்களில் ஒன்றாகும்.

*    ஜன் தன் யோஜனா மூலம், ஓவர் டிராப்ட் வசதியுடன் வங்கிகளை எளிதில் அணுக முடிந்தது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கடன் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நம்பிக்கையை வங்கிகளுக்கு ஜன் தன் திட்டம் அளித்தது. இதன் பயனாக,கிராமப்பகுதிகளில் வழங்கப்பட்ட கடனுதவி கணிசமான அளவுக்கு உயர்ந்தது.

*     நிதி உதவிகள் மற்றும் இதர மானியங்கள் சரியானவர்களுக்கு சென்றடைவதை நோக்கமாகக் கொண்ட ஆதார் சட்டம் 2016-இல் பண மசோதாவாக நிறைவேற்றப்பட்டது. இதனால், ஆதார் எண்ணுக்கு சட்டபூர்வ ஆதரவு கிடைத்தது.  இதன் மூலம், மானியங்களும், இதர உதவிகளும் உரியவர்களுக்கு வெளிப்படையான முறையில் சென்றடைவது உறுதி செய்யப்பட்டது.

*    2016-இல் அரசு மேற்கொண்ட மூன்றாவது மிகப்பெரிய திட்டம் பிம் எனப்படும் பாரத் இன்டர்பேஸ் பார் மணி. தேசிய பேமன்ட்ஸ் கார்ப்பரேசன் ஆப் இந்தியா உருவாக்கிய இந்த செல்பேசி செயலிலி,மின்னணு பணம் செலுத்தும் வசதியை அளிக்கிறது. பணமற்ற பரிவர்த்தனைக்கு இது வழிவகுக்கிறது.  

*     கைபேசிகள் வழியாக, நுகர்வோரின் வங்கி கணக்கில் இருந்து, பில்லுக்கு உரிய பணம் உடனடியாக வியாபாரிகளின் வங்கிக்கணக்குக்கு சென்றடையும்.

*    ஜன் தன் யோஜனா, ஆதார் சட்டம், பிம் செயலிலி ஆகியவை வெளிப்படையான அரசு நிர்வாகத்துக்கு வழி ஏற்படுத்தி உள்ளன.

*     தற்போது கிட்டத்தட்ட அனைத்து வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு இணையதள வங்கி சேவையை வழங்கி உள்ளன.*    வங்கி தொழில்நுட்ப புரட்சியும், தொலைத்தொடர்பு துறையில் ஏற்பட்ட புரட்சியும் சேர்ந்து பணமற்ற, மின்னணு பரிவர்த்தனைகளுக்கான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.

*    ஜன் தன்-ஆதார் - மொபைல் முத்தொழில்நுட்பம் மொபைல் பேங்கிங் வசதியை மின்னஞ்சல் அனுப்புவது போன்று மிகவும் எளிமைப்படுத்தி உள்ளது.

*     தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் (நெப்ட்), உடனடி பரிவர்த்தனை சேவை (ஐ.எம்.பி.எஸ்), மின்னணு விடுவிப்பு முறை (ஈ.சி.எஸ்) ஆகியவை வங்கிப்பிரிவு நடவடிக்கைகளை வெகுவாக துரிதப்படுத்தி உள்ளது. நிதித்துறை தொழில்நுட்பம் வங்கி நடவடிக்கைகளில் தற்போது ஆதிக்கம் செலுத்துகிறது.

*     வங்கித்துறையில் தற்போதைய தாரகமந்திரம் வங்கிகளை விட வங்கி நடவடிக்கைகளே அவசியம் என்பதாகும். நுகர்வோர் வாங்கும் பொருட்களுக்கு ஸ்வைப் மிஷின்கள் வாயிலாக பணம் செலுத்தும் முறையைப் பின்பற்றுவதன் மூலம் கரன்சி நோட்டுகளை ஒழிக்க
பரிசீலிலிக்கப்பட்டு வருகிறது.

*     தொழில்நுட்ப முன்னேற்றம், பாரம்பரிய வங்கி முறைகளை மாற்றி, வங்கிகளையும், வாடிக்கையாளர்களையும் இணைந்து செயல்பட வைத்துள்ளது.

*     தற்போதைய இளையதலைமுறை வாடிக்கையாளர்கள் சமூக வலைதளங்கள் மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனைகளில் ஆர்வம் கொண்டுள்ளனர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :