Add1
logo
Logo
பொது அறிவு உலகம்
மிஸ் யுனிவர்ஸ் 2017
 ................................................................
அனைவருக்கும் நிறைவான மருத்துவ சேவை
 ................................................................
எல்லைகளை தாண்டும் இந்திய ரயில்வே
 ................................................................
டிஜிட்டல் மயம் : வானொலியும் தொலைக்காட்சியும்
 ................................................................
நிடி ஆயோக் புதிய செயல் திட்டம்
 ................................................................
சூரியன், வெள்ளி கிரக ஆய்வுக்கான இந்திய விண்கலம்
 ................................................................
வங்கித் துறையில் புதிய தொழில்நுட்பம்
 ................................................................
01-01-18
*     53 ஆண்டுகளுக்கும் முன் கோடைகாலத் தில் ஒருநாள், அமெரிக்க தயாரிப்பான நிக்கி அப்பாச்சி எனப்படும் இருகட்ட  முதலாவது ராக்கெட்டை கேரளாவின் மீன்பிடி பகுதியான தும்பாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இந்தியா தனது முதல் அடையாளத்தை விண்வெளியில் பதித்தது.

*    திருவனந்தபுரம் புறநகரில் அமைந்த தும்பா பூமத்தியரேகைபகுதி ஏவுதளம் (டி.இ.ஆர்.எல்.எஸ்.,) அன்றைய சூழலில் எந்த கட்டிடங்களும் இல்லாமல் இருந்தது. அங்குள்ள பிஷப் இல்ல கட்டிடத்தின் பகுதி விண்வெளி மையத்தின் இயக்குனர் அலுவலகம், பழமையான புனித மேரி மக்டாலினே தேவாலய கட்டிடத்தில் கட்டுப்பாட்டு அறை இருந்தது.

*    ராக்கெட் செல்லும்பாதையை அதன் புகைபோவதை வெறும் கண்ணால் பார்த்து மதிப்பிட வேண்டியிருந்தது. 1963-ஆம் ஆண்டு நவம்பர் 21-ஆம் நாள் ராக்கெட் ஏவுநாளின் கதைதான் இது.

*    அதுமட்டுமா ராக்கெட்டுக்கு வேண்டிய தளவாடங்களையும், ஏவுதல் கருவிகளும் மாட்டு வண்டியிலும் , மிதிவண்டியிலும் கொண்டுவரவேண்டிய நிலை இருந்தது.

*    அதற்கு அடுத்த 12 ஆண்டுகளில் அதாவது 1975-ஆம் ஆண்டு இந்தியா தனது முதலாவது பரிசோதனை செயற்கைகோளான ஆர்யபட்டாவை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. ரஷ்ய ராக்கெட் உதவியுடன் வேறு எந்த கட்டமைப்பு வசதியும் இல்லாமல் இந்த ராக்கெட் செலுத்தப்பட்டது.

*    அப்போது பெங்களுருவில் இயங்கி வந்த இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் (இஸ்ரோ) கழிவறைகளை கூட விஞ்ஞானிகள் கட்டுப்பாட்டு அறையின் தகவல் சேகரிப்பு களமாக பயன்படுத்தினார்கள்.

*    தும்பாவில் தனது முதல் குழந்தை அடி எடுத்துவைத்த நிகழ்வைத் தொடர்ந்து இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் சாதனை பயணம்  பல்வேறு வரலாற்று முக்கியத்துவ நிகழ்வுகளோடு வளர்ந்து பன்னாட்டு செயற்கைகோள்ஏவுதல் மற்றும் உற்பத்தி தொழில்துறையில் முக்கியமான இடத்தை பிடிக்கும் அளவுக்கு முன்னேற்றத்தை அடைந்துள்ளது.

*     சந்திரனை பற்றிய ஆய்வுக்காக இந்தியா விண்கலத்தை அனுப்பியதன் மூலமும், பிற நாடுகளுக்காக செயற்கை கோள்களை வடிவமைத்தன் மூலமும், இந்தியா பன்னாட்டு அங்கீகாரத்தை பெற்றது.

*     வெளிநாட்டு செயற்கைகோள்களை செலுத்துவதில் மட்டுமல்ல, செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைகோளை புவி ஆய்வுக்கு அனுப்புவதிலும் இந்தியா  வெற்றி பெற்றது.

*    ஆண்டுகளின் போக்கில் இந்தியாவின் விண்வெளி திட்டங்கள் சமூக, பொருளாதார , சமுதாய நன்மைக்கும், பூமியை பற்றிய ஆய்வுக்கும் இயற்கை வள ஆதாரங்களின் பயன்பாட்டிற்கும், நீர்வள ஆதார வளர்ச்சிக்கும் தவிர்க்க முடியாத ஒன்று என்ற நிலைக்கு சென்றுவிட்டது.

*    அதுமட்டுமல்ல விண்வெளி சார்ந்த பயன்பாடுகளான தொலைத்தொடர்பு கல்வி, தொலை மருத்துவ வசதி திட்டங்கள் நாட்டின் அனைத்து கிராமப்புற மக்களுக்கும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதாக அமைந்தது.

*     இந்தியா அண்மையில் ஜிசாட் - 17 என்ற தொலைத்தொடர்பு செயற்கைகோளை ஏரைன் 5 ராக்கெட் மூலம் பிரஞ்ச் கயானாவில் இருந்து கடந்த ஜூன் 28-ஆம் தேதி விண்ணில் செலுத்தி உள்ளது.

*     இது இந்தியா அனுப்பிய 17-வது செயல்பாட்டில் உள்ள தொலைத்தொடர்பு  செயற்கைகோள் என்பது பெருமைக் குரியதாகும். அத்துடன் முன்பு இந்தியதேசிய செயற்கைகோள் அமைப்பான இன்சாட் மூலம் பெறப்பட்ட வானிலை மற்றும் செயற்கைகோள் சார்ந்த மீட்புசேவைகள் இப்போது இந்த செயற்கைகோள் மூலம் பெறப்படுகிறது.

*     இந்தியாவில் தயாரிப்போம் திட்டத் தின் செயலாக்கமாக கடந்த ஜூன் 23-ஆம் தேதி இந்தியா பிஎஸ்எல்வி சி.38 ராக்கெட் மூலம் 712 கிலோ எடைகொண்ட  கார்ட்டோசாட்-2 செயற்கைகோளை பூமி வள ஆய்வுக்காக விண்ணில் செலுத்தியது. இத்துடன் 30 சிறிய வகை செயற்கைகோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டன. இவற்றில்பல செயற்கைகோள்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு சொந்தமானது. அத்துடன் பிஎஸ்எல்வி ராக்கெட் வரிசையில் 39-வது வெற்றிகரமான விண்வெளி பயண சாதனையாகும்.

*    இந்தியா விண்வெளி தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய சாதனையை இந்த ஆண்டு ஜூன் 5-ஆம் தேதி நிகழ்த்தியது. 

அதாவது புவிச்சார்நிலைசாரா செயற்கைகோள் ஏவுவாகனமான ஜிஎஸ்எல்வி மார்க் 3 டி-1 என்னும் அதிக எடைகொண்ட ராக்கெட் மூலமாக செயற்கைகோள் மூலமாக ஜிசாட்-19 என்ற தொலைத்தொடர்பு செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது இஸ்ரோ.

*     4 டன் எடைகொண்ட செயற்கைகோளை இஸ்ரோ 3136 செயல் குதிரைதிறன் கொண்ட ராக்கெட் மூலமாக   உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் உதவியால் இது சாத்திய மானது. இதன் மூலம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திறனும்இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.

*     இந்திய தொலைத்தொடர்பு செயற்கைகோள்கள் விண்வெளியில் இந்தியாவில் இருந்தபடியே செலுத்தும் முழு திறனை பெற்றுள்ளது.

*    4 ஆயிரம் கிலோ எடை கொண்ட செயற்கைகோள்களை விண்ணுக்குசெலுத்தும் திறன் கொண்ட நாடுகள்பட்டியலில் அமெரிக்கா, ரஷ்யா,ஐரோப்பா, சீனா, ஜப்பான், ஆகிய நாடுகள் மட்டுமே உள்ள நிலையில் இப்போது இந்தியாவும் இணைந்துள்ளது.

*     மே மாதம் 5-ஆம் தேதி இந்தியாதெற்காசியாவுக்கான முதலாவதுசெயற்கைகோள் எஸ்.ஏ.எஸ்.ஐ விண்ணில் செலுத்தியது. அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், மாலத்தீவு, நேபாளம், இலங்கை ஆகிய 6 நாடுகளுக்கு இயற்கை பேரிடர் காலங்களில் உதவும் நோக்கத்தில் 2 ஆயிரத்து 230 கிலோ எடைகொண்ட ஜிசாட்-9 என்ற ராக்கெட்டை இஸ்ரோ முற்றிலும் இந்தியாவின் நிதி உதவியோடு வடிவமைத்து ஜிஎஸ்எல்வி எப்.-9 ராக்கெட் மூலம் விண்ணுக்கு செலுத்தியது.

*     பிப்ரவரி மாதம் இந்தியா இஸ்ரோ விண்வெளி வரலாற்றில் புதிய அத்தியாயத்தை தொடங்கியது.

அதாவது பிஎஸ்எல்வி சி 37 என்ற ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி உலக நாடுகளில் தலைப்புச்செய்தியான சாதனைதான் அது. இதில் கார்ட்டோசாட் 2 செயற்கைகோளும் அடங்கும். இந்த ராக்கெட் 6 நாடுகளை சேர்ந்த செயற்கைகோள்களை எடுத்துச்சென்றது. இந்தியா இதற்கான சேவை வழங்கும் நாடாக பரிணமித்தது.

*     இந்த தனிச்சிறப்புவாய்ந்த சாதனைகளால் விண்வெளி பாதையில் இஸ்ரோ வலுவான நிலையில் இடத்தை பதிவு செய்துகொண்டது.  

*     2016-ஆம் ஆண்டு முக்கியமான செயற்கைகோள் ஏவுதல் வெற்றி நிகழ்வாக தொலை உணர்வு செயற்கைகோளான ரிசோர்சாட்  2 செயற்கைகோள் டிசம்பர் மாதம்  விண்ணில் செலுத்தப்பட்ட நிகழ்வு அமைந்தது.

*    அதுபோல 20 செயற்கைகோள்கள் ஒரே ராக்கெட்டில் செலுத்தியது, நாவிகேஷன் எனப்படும் வழிகாட்டி செயற்கைகோள், ஜிசாட்-18தொலைத்தொடர்பு செயற்கைகோள் ஆகியனவும் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன.

*    அதுபோல 2015-ஆம் ஆண்டு இஸ்ரோ ஜிசாட் 15, அஸ்ட்ரோசாட் செயற்கைகோளையும் விண்ணில் செலுத்தியது.

*    அதேநேரத்தில் இஸ்ரோ வெற்றிகர மாக இந்தியாவில் தயாரிக்கப்பட்டகிரையோஜெனிக் ராக்கெட் என்ஜினையும் பரிசோதனை செய்தது.

*    இது தவிர ஜூலைக்குள் 5 செயற்கைகோள்கள் பி.எஸ்.எல்.வி மூலமாகவும், ஐஆர்என்எஸ்எஸ்.-1டியும் விண்ணில் செலுத்தப்பட்டது.   நான்காவது மண்டல வழிகாட்டி செயற்கைகோளாகும் இது .

*     டிசம்பர் 2014-ஆம் ஆண்டில்  தொலைத்தொடர்பு செயற்கைகோளான ஜிசாட் - 16 விண்ணில் செலுத்தப்பட்டது. மேலும் பிஎஸ்எல்வி மூலம் ஐஆர்என்எஸ்.1சி வழிகாட்டி செயற்கைகோள் அக்டோபர் மாதம் விண்ணில் செலுத்தப்பட்டது. மேலும் ஐஆர்என்எஸ்-1பி, எனும் நாட்டின் 2-வது  வழிகாட்டி செயற்கைகோளும் விண்ணில் செலுத்தப்பட்டது.

*     வருடங்கள் சென்றுகொண்டிருக்கும் நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகள் அடுக்கடுக்கான திட்டங்களுடன் வேகமாக இருக்கிறார்கள்.

*    வரும் 2018-ன் முதல்பகுதியில் நிலவுக்குசந்திராயன் 2 விண்வெளி ஓடத்தை அனுப்பும் திட்டத்தில் இருக்கிறார்கள். இது சந்திராயன் ஒன்றின் மேம்படுத்தப் பட்ட வடிவமைப்பாகும். இந்திய தொழில்நுட்பத்தில் உருவாகும் இதில் ஆர்பிட்டர், லேண்டர், மற்றும் ரோவர் எனப்படும் அமைப்பு, தரையிறங்குதல் மற்றும் இயங்குதல் கருவிகள் இருக்கும்.  இவை சந்திரனின் நிலப்பரப்பில் உள்ள கனிம மற்றும் தனிம வளங்களை ஆய்வு செய்யும்.  

*    அடுத்த மிகப்பெரிய திட்டம் என்பது சூரியனின் நிலப்பரப்பு பற்றிய அறிவியல் ஆய்வு ஆகும். அதாவதுபோட்டாஸ்பியர், குரோமோஸ்பியர் என்று சொல்லப்படும் சூரியனின் மூன்றுவெளிவட்ட அடுக்குகளையும், சூரிய புயல் பற்றியும் ஆய்வு செய்வதாகும். 

*     2020-ஆம் ஆண்டு இஸ்ரோ பிஎஸ்எல்வி எக்.எல் மூலம் இதை மேற்கொள்ளும். ஆதித்தியா எல்-1 செயற்கைகோள் சூரியனின் கதிர்கள் மற்றும் சூரிய புயல் குறித்தும் அது தொலைத்தொடர்பு கட்டமைப்பை எப்படி தாக்குகின்றன என்பது பற்றியும் ஆய்வு செய்யும்.

*   அடுத்ததாக செவ்வாய் கிரகத்திற்கு இஸ்ரோ 2021-22-ஆம் ஆண்டில் இரண்டாவது விண்வெளி கப்பலை அதாவது மங்கள்யான் 2-ஐ அனுப்ப உள்ளது. முதலாவது மங்கள்யான் கப்பல் வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கும் நிலையில் இந்த திட்டம் மேற்கொள்ளப் படுகிறது.  அது 3 ஆண்டு பயணம் செய்து சிவப்பு கோள் என்று சொல்லப்படும் செவ்வாய் கிரகத்தில் கால்பதிக்கும்.

இதுதான் மிக செலவு குறைந்த திட்டம்.

அதுபோல வீனஸ் (வெள்ளி) கிரகத்திற்கு 2020-ஆம் ஆண்டுக்கு பிறகு அந்த கிரகத்தின் வெளிபரப்பு ஆய்வுக்காக விண்வெளி ஓடத்தை அனுப்ப உள்ளது என்று முதல்முறையாக இந்தியா அறிவித்துள்ளது.
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :