Add1
logo
Logo
பொது அறிவு உலகம்
மிஸ் யுனிவர்ஸ் 2017
 ................................................................
அனைவருக்கும் நிறைவான மருத்துவ சேவை
 ................................................................
எல்லைகளை தாண்டும் இந்திய ரயில்வே
 ................................................................
டிஜிட்டல் மயம் : வானொலியும் தொலைக்காட்சியும்
 ................................................................
நிடி ஆயோக் புதிய செயல் திட்டம்
 ................................................................
சூரியன், வெள்ளி கிரக ஆய்வுக்கான இந்திய விண்கலம்
 ................................................................
வங்கித் துறையில் புதிய தொழில்நுட்பம்
 ................................................................
01-01-18*     2015-இல் உருவாக்கப்பட்ட நிடி ஆயோக், இந்திய ஐனநாயகத்தின் மிக இளைய அமைப்புகளில் ஒன்றாகும். பழைய பாணியிலான மத்திய திட்டமிடலை அகற்றிவிட்டு வளர்ச்சி பற்றிய திட்டமிடலை மறுபார்வை செய்வதற்கான பொறுப்பு அதற்கு அளிக்கப்பட்டுள்ளது.

*     உலகப் பொருளாதாரத்தோடு இந்தியப் பொருளாதாரம் வெகுவேகமாக ஒருங்கிணைவதால் மத்திய திட்ட மிடலுக்கும் தனியார் மூலதன வருகை அதிகரிப்பதற்கும் முரண்பாடுகள் ஏற்படுகின்றன.

*     ஒத்துழைப்புடனான கூட்டமைப்பை ஊக்கப்படுத்தவும், வளர்ச்சி இலக்குகளில் தேசிய பொதுக்கருத்தை உருவாக்கவும், சீர்திருத்தங்களுக்கான நிகழ்ச்சி நிரலுக்கு மறு விளக்கம் அளிக்கவும், மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையேயான பலவகைப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் ஒரு மேடை யாகவும், திறன் வளர்ப்புக்கும், அறிவு மற்றும் புதிய கண்டுபிடிப்புக்கான அச்சாக செயல்படவும் நிடி ஆயோகிற்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. ஒரு புதிய அமைப்புக்கான மாபெரும் கடமையை அது பிரதிநிதித்துவம் செய்கிறது.

*   நிடி ஆயோக்கின் முந்தைய வடிவமான திட்டக்குழு மத்திய அரசு நிறைவேற்றிய தீர்மானத்தின் படி பிரதம மந்திரியைத் தலைவராகக் கொண்டு 1950 மார்ச் மாதத்தில் திட்டக்குழு அமைக்கப்பட்டது.

*     விரைவான தொழில் துறை வளர்ச்சியை அடைவதற்காக மக்களின் (மத்திய அரசின்) முதலீட்டின் மூலம் கனரகத் தொழில்களை ஏற்படுத்துவது இதன் ஆரம்ப கட்டக் கடமையாக இருந்தது.

*    திட்ட ஆதார வளங்களை  மதிப்பிடுவது, பகுதி வளர்ச்சிக்கான திட்டங்களையும் செயல்பாடுகளையும் வடிவமைத்தல், அமலாக்க துறையைத் தீர்மானிப்பது ஆதாரவளங்களின் தட்டுப்பாட்டைக் கண்டறிவது,  அமலாக்கத்தை   எடுத்துரைப்பதும் நீக்குப் போக்கா செயல்படுவதும் திட்டக் குழுவுக்கு அளிக்கப்பட்ட பணிகளாகும்*    திட்டக் குழு 1950 முதல் 2014 வரை பன்னிரண்டு ஐந்தாண்டு திட்டங்களை உருவாக்கியது.

*     1-வது மற்றம் 2-வது திட்டங்களை, பொதுத்துறை நிறுவனங்களுக்கான பொது வளங்களை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தன.

*     3-வது திட்டம் ஏற்றுமதிக்குக் கூடுதல் அழுத்தம் கொடுப்பதில் கவனம் செலுத்தியது.

*    அந்நியச் செலாவணி நிலுவை சிக்கலாக இருந்த காலத்தில் உருவாக்கப்பட்ட 4-வது திட்டம் வேளாண் வளர்ச்சியில் கவனம் செலுத்தியது.

*     5-வது திட்டம் சமூக நலத் திட்டங்களுக்கு செலவிடுவதற்கான ஒதுக்கீட்டை அதிகம் கொண்டிருந்தது.

*     6-வது மற்றும் 7-வது திட்டங்களில் அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்கள் இருந்தன. அடிப்படை வசதிகளுக்கு செலவிட்ட திட்ட நிதியை அதிகரிப்பதில் கவனம் செலுத்தின.

*    6.7 சதவீத வளர்ச்சியை எட்டவைத்த பொருளாதார சீர்திருத்தங்களுக்கு மத்தியில் 8-வது திட்டம் உருவாக்கப்பட்டது.

*     9-வது பொருளாதார வளர்ச்சி 2.4 சதவீதம் என்ற அளவுக்கு படுவீழ்ச்சி அடைந்த காலமாகும்.

*    10 மற்றும் 11-வது திட்டங்கள் அமலக்கப் பட்ட 2004-2014 கால கட்டம் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதத்திற்கும் கூடுதலாக இருந்த காலமாகும்.

*     திட்டக்குழு என்பது கொள்கைச் சோர்வை ஏற்படுத்தியிருப்பது மத்திய திட்டமிடல் நடவடிக்கைகளில் அடிப்படை மாற்றங்கள் செய்யவேண்டிய அவசியத்தை காட்டுவதாக அரசின் உள் மதிப்பீடு இருந்தது.

*     மானியங்கள் அதிகரிப்பு, கல்வி உரிமைச் சட்டம், தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம், ஏழைகளை இலக்காகக்  கொண்ட பொது விநியோக முறை ஆகியவை அரசு நிதியாதாரத்தை பெருமளவு கோரியது என்பதால் அரசு முதலீடு சீர்குலைந்தது மதிப்பீட்டில் கண்டறியப்பட்டது.

*     மேலும் கடுமையான தொழிலாளர் சட்டங்கள் வளர்ச்சியைத் தாமதப்படுத்தி பொதுமக்களுக்கான வீட்டுவசதி மற்றும் அரசின் திட்டங்களுக்கு நிலம் வழங்கு வதிலும் சிரமங்கள் இருந்தன. ஒரு புதிய அமைப்பு முறை தேவைப்பட்டது.

*     3 ஆண்டுகள் என்ற குறுகிய காலத் திலேயே நிடி ஆயோக் ஏராளமான பணிகளைச் செய்திருக்கிறது. அது நீண்ட கால கொள்கைகளை வடிவமைக்கத் தொடங்கியது. ஒத்துழைப்புடனான கூட்டாட்சியை ஊக்கப்படுத்துகிறது. அறிவுத்திறன் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஆதரவு தருகிறது.

*     பெரிய முதலீடுகளை கொண்டுவருதல் மற்றும் கண்காணித்தல் பணியை மேற்கொள்கிறது. மின்னணு தொழில்துறைக்கான நீண்டகால உத்தியாக இந்தியாவில் உற்பத்தி என்பதையும் நிலக் குத்தகை சட்டத்துக் கான ஒரு முன்மாதிரியையும், நிடி ஆயோக் உருவாக்கியது.

*    தேசிய  எரிசக்தி கொள்கையை வகுத்தது. வேளாண்மைக்கு புது உத்வேகம் அளிப்பதற்கான செயல் திட்டத்தை தயாரித்தது. வடகிழக்கு மற்றும் மலைப்பகுதிகளுக்கான வளர்ச்சித் திட்டங்களுக்கு வடிவம் கொடுத்தது.

*    12-வது ஐந்தாண்டு திட்டத்தை ஆய்வுக்கு உட்படுத்தியது. மேலும் நலிவடைந்த மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்கவும் நிடி ஆயோக் பரிந்துரை செய்தது.  

*     இந்திய மருத்துவக் கவுன்சில் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு சீர்திருத்தங்களை விரைவுபடுத்தியது.

*     நிலக்குத்தகைக்கான மாதிரி சட்டத்தை உருவாக்கியதும் பங்குகள் விற்பனைக்கான முன்னுரிமைகளைக் கட்டமைப்பு செய்ததும் நிடி ஆயோக்கின் இரண்டு தலைசிறந்த முயற்சிகளாகும்.

*     மத்திய திட்டமிடல் என்பதிலிருந்து ஒத்துழைப்புடனான கூட்டாட்சி முறை என்பதில் கவனம் குவிக்கும் மாற்றம் நிடி ஆயோக்கின் முதன்மைக் கருத்தாக இருந்தது.

*     ஒரே அளவு அனைத்துக்கும் பொருந்தும்என்ற அணுகுமுறையிலிருந்து இந்தியா வெளியேறி திட்டங்களுக்கும் மாநிலங்களின் தேவைகளுக்கும் இடையேயான சிறந்த பொருத்தத்தை நிடி ஆயோக் மூலம் உருவாக்கப்படும்  என்று பிரதம மந்திரி கூறினார்.

*     நிடி ஆயோக்கின் நிர்வாகக் குழு அடிக்கடி கூடுகிறது. முதலமைச்சர்களைக் கொண்ட 3 துணைக் குழுக்கள், திறன்வளர்ப்பு,தூய்மை பாரதம் ஆகிய மத்திய அரசு ஆதரவிலான திட்டங்கள் (சி.எஸ்.எஸ்) மீது செயல்புரிகின்றன. இவர்களின் பரிந்துரைகள் அடிப்படையில் புதிய சி.எஸ்.எஸ். பகிர்வு முறை அறிவிக்கப்படுகிறது. வெளிப்படையான விதிகள் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

*    அனைத்து சேவைகளுக்கும் தூய்மை பாரத கூடுதல் வரி வசூலிக்கப்படுகிறது.திறன் மேம்பாட்டு முயற்சிகளை தீவிரமாக மேற்கொள்ள பிரதமமந்திரியின் கவுஷல் விகாஸ் யோஜனாவில் மாநிலங்களின் ஈடுபாடு உறுதி செய்கிறது.

*     மாறிவரும் இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களுக்குக் சாத்திரமான முயற்சி களை நிடி ஆயோக் செய்கிறது. விரைவான வளர்ச்சி, அனைவரையும்உள்ளடக்கும் நடைமுறை, வேலைவாய்ப்பை உருவாக்குதல்,எரிசக்தி சேமிப்பு மற்றும் திறமை, நல்ல நிர்வாகம், தூய்மை பாரதம் ஆகியவற்றுக்காக அனைத்து மத்திய அமைச்சர்களிடமிருந்தும் திட்ட ஆலோசனைகளை அது கோரியுள்ளது.

*     உயர் முன்னுரிமை துறைகளான கல்வி, சுகாதாரம், வேளாண்மை, ஊரக வளர்ச்சி, பாதுகாப்பு, ரயில்வே, சாலைகள் ஆகியவற்றுக்கு கூடுதல் நிதியில் அதிகப் பங்கினை ஒதுக்கீடு செய்வதன் மூலம் செலவின் சமன்பாட்டில் மாற்றத்தை செய்யும் நோக்கத்துடன் 3 ஆண்டு செயல் திட்டத்திற்கு நிடி ஆயோக்கின் நிர்வாகக் கவுன்சில் 2017 ஏப்ரலில் ஒப்புதல் அளித்தது.

*     வேளாண்மையில் செய்யப்படும் மாற்றம் 2022-க்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாகும் என்ற எதிர்பார்ப்பைக் கொண்டுள்ளது. நிலக்குத்தகைக்கான மாதிரி சட்டம், வேளாண் உற்பத்திப் பொருள்களின் சந்தைக் குழுக்களில் சீர்சிருத்தம், ஒப்பந்தப் பண்ணை முறைக்குசட்ட வரையறை, எம் எஸ் பி திட்டத்தால் ஏற்படும் கோளாறுகளை நீக்கும் கொள்கைகள் ஆகியவை மூலம் இது சாதிக்கப்படும்.

*     மேலும் நீடித்த வளர்ச்சி இலக்குகள் அமலாக்கத்தை நிடி ஆயோக் கண்காணிக்கும்.

*     நிடி ஆயோக் அதன் முதல் 3 ஆண்டுகளில் மிகச்சிறப்பான பணியைச் செய்திருக்கிறது. வரும் ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி நடைமுறையில் புதிய உத்வேகத்தை இந்த அமைப்பு அளிக்கும்.


 நிடி ஆயோக்கில் இளம் வல்லுநர்கள்

*  பல்வேறு துறைகளைச் சேர்ந்த, இளம் வல்லுனர்
களை நியமிக்க, அரசு கொள்கைகளை வகுக்கும் நிடி ஆயோக் அமைப்பு முடிவு செய்து உள்ளது.

*    இதன்படி, 65 இளம் வல்லுனர்கள், நிடி ஆயோக் அமைப்பில் உள்ள, பல்வேறு பிரிவுகளில் நியமிக்கப்பட உள்ளனர்.

*    அனைத்து திட்டங்களை விரைவாக செயல்படுத்தவும்; திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆராயவும்; புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதற்கும், 65 இளம் வல்லுனர்களை நியமிக்க உள்ளதாக, நிடி ஆயோக் தெரிவித்துள்ளது.

*    இதன் ஒரு பகுதியாக, நிடி ஆயோக் நிலக் கொள்கை தலைவராக, வேளாண் பொருளாதார நிபுணரான, தாஜ்முல் ஹக்கின் நியமிக்கப்பட்டு உள்ளார்.

*    நிடி ஆயோக்கில் இருந்து புதிதாக, பிரதமர் பொருளாதார ஆலோசனை பிரிவு உருவாக்கப் பட்டு உள்ளது.

*    இது போல, பல பிரிவுகள் உள்ளதால், அவற்றில் பணிபுரிய, சிறந்த இளம் வல்லுனர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :