Add1
logo
Logo
பொது அறிவு உலகம்
மிஸ் யுனிவர்ஸ் 2017
 ................................................................
அனைவருக்கும் நிறைவான மருத்துவ சேவை
 ................................................................
எல்லைகளை தாண்டும் இந்திய ரயில்வே
 ................................................................
டிஜிட்டல் மயம் : வானொலியும் தொலைக்காட்சியும்
 ................................................................
நிடி ஆயோக் புதிய செயல் திட்டம்
 ................................................................
சூரியன், வெள்ளி கிரக ஆய்வுக்கான இந்திய விண்கலம்
 ................................................................
வங்கித் துறையில் புதிய தொழில்நுட்பம்
 ................................................................
01-01-18

அனைவருக்கும் நிறைவான மருத்துவ சேவை


*     இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து ஆரோக்கியத்துறையில் வெற்றிகரமாகப் பயணித்து வந்ததன் விளைவாக, இந்திய மருத்துவர்களின் திறமை இங்குச் சிகிச்சைக்காக வரும் நம்பிக்கையை வெளிநாட்டினருக்கு அளித்துள்ளது.

*     நமது நாடு மருத்துவச் சுற்றுலாத் துறையில் ஏற்றம் கண்டுள்ளது. வாழ்நாள் அதிகரிப்பு, குழந்தை இறப்பு விகிதம், கருவுறுதல் விகிதம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றம் ஆகியவையும் வெளிநாட்டினரின் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது.

*     ஒரு நாட்டின் வாழ்க்கைத்தரத்தை எடுத்துக்காட்டும் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது, உலக வங்கியின் மதிப்பீடுகளின்படி, 1960-ஆம் ஆண்டின் நிலையிலிருந்து உயர்ந்து, 2016-இல் 81.3 டாலரிலிருந்து 1709.4 டாலராக ஆனது.

*     பிறப்பின் போதான வாழ்நாள் எதிர்பார்ப்பைப் பொறுத்தமட்டில், தற்போதைய இறப்புவகைகள் ஒருவருடைய வாழ்நாள் முழுவதும் நீடித்திருக்குமானால், அவர் வாழும் ஆண்டுகளின் சராசரி எண்ணிக்கையானது 65.8 சதவீதம் உயர்ந்துள்ளது. அல்லது 1960களின் இடையில் 27 ஆண்டுகள், 41 ஆண்டுகள் என 2015-இல் 68 ஆண்டுகள் ஆகியுள்ளது.

*     தோராயமான பிறப்பு விகிதமும் 1970-இல் 37 ஆக இருந்து 2012-இல் 22.2 ஆகக் குறைந்துள்ளது (1000 பேர் கொண்ட மக்கள்தொகையில்). நாட்டின் மொத்த கருவுறுதல் விகிதம் குறைந்த துடன் மக்கள்தொகையை நிலைப் படுத்தும் முயற்சிகள் டெல்லியில் 1.7, கேரளத்தில் 1.8, தமிழ்நாட்டில் 1.7, மஹாராஷ்டிராவில் 1.8, மேற்குவங்காளத் தில் 1.6, ஹிமாச்சலப் பிரதேசத்தில் 1.7 என்று 2.3 என்ற அளவுக்குக் குறைந்து போய்விட்டன. கருவுறுதல் விகிதம் ஒரு பெண்ணுக்கு 2.1 குழந்தை என்ற மாற்றுவிகிதத்தை  விடக் குறைவானதாகும்.

*     1960-இல் 1000க்கு 165 குழந்தைகள் என்றிருந்த குழந்தைகள் இறப்பு விகிதம் 2015-இல் 38 குழந்தைகள் என்னும் அளவுக்குக் குறைந்தது. நமது நாட்டின் தடுப்பூசித் திட்டமே இதற்கு முக்கியக் காரணம் ஆகும்.

*     தேசிய காசநோய்த் தடுப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக 1962-இல் பிசிஜி என்னும் முதல் தடுப்பூசி போட ஆரம்பித்த பிறகு, இந்தியா அந்தப் பாதையில் வெற்றிகரமாக நடைபோட்டு வருகிறது.

*     உலகச் சுகாதார அமைப்பின் முன்முயற்சி யின் ஒரு பகுதியாக பிசிஜி, டைபாய்டு தடுப்பூசிகளை உள்ளடக்கிய நோய்த் தடுப்பு தொடர்பான ஒரு விரிவான திட்டம் இந்தியாவில் 1978-இல் தொடங்கப்பட்டது. 1979-இல் இந்தத் திட்டத்தில் போலியோ சொட்டு மருந்தும் சேர்க்கப்பட்டது.

*    1985-இல் அனைத்து குழந்தைகளையும் உள்ளடக்கும் இலக்குடன் இந்தத் திட்டம் உலகளாவிய நோய்த்தடுப்புத் திட்டமாக (யூஐபி) மாற்றப்பட்டது.

*     நாளடைவில், ஹெபடைடிஸ் பி, ஜப்பான் மூளைக் காய்ச்சல் ஆகியவற்றுக்கு  எதிரான தடுப்பூசிகளும் இதில் சேர்க்கப்பட்டன.

*     தடுப்பூசிக்கு அளிக்கப்பட்ட இந்த அழுத்தத்தின் விளைவாக இந்தியா இளம்பிள்ளைவாதம் அற்ற நாடாக ஆனது. ஆண்டு முழுவதும் நிலவும் நோய்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலிலிருந்து இந்தியா உலகச் சுகாதார அமைப்பால் நீக்கப்பட்டது.

*     ஐந்து வயதுக்கும் குறைவான குழந்தைகளின் இறப்பு விகிதத்தையும் தடுப்பூசி குறைத்தது. கடந்த 50 ஆண்டுகளில் 2015-ஆம் ஆண்டு 1000 குழந்தைகளில் 233 என்ற அளவில் 47.7 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது.

எண்ணிக்கையில் இது பெரிய அளவிலானதே எனினும் 2015-இல் ஐந்து வயதிற்கு உட்பட்ட 5.9 மில்லியன் குழந்தைகள் இறக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும் இந்த விகிதமும் குறைந்தது. அவர்களில் 45 சதவிகிதத்தினர் புதிதாகப் பிறந்த பச்சிளம் குழந்தைகள் ஆகும்.

*    இவ்வாறு முன்னேற்றங்கள் நிகழ்ந்த போதிலும், இந்தியாவில் நலத்துறை யானது இன்னும் சில சவால்களைச் சந்தித்து வருகிறது.

*    எடுத்துக்காட்டாக - மக்கள்தொகையில் பெரும் தொகையினர்-மூன்றில் இரண்டு பங்கு குழந்தைகளும் பாதிக்கும் மேற்பட்ட பெண்களும்-இரத்தச் சோகையினாலும் ஊட்டச்சத்தின்மையாலும் பாதிக்கப்படுகின்றனர். செலவு பிடிக்கும் மருத்துவம், ஏழைகளுக்கும் நலிந்த பிரிவினருக்கும் தங்கள் சக்திக்கு மீறியதாக ஆகியுள்ளது. வளமாக வாழ்ந்துவரும் குடும்பத்தினர்கூட, கடுமையான நோய் தாக்கினால் வறுமையின் விளிம்புக்குத் தள்ளப்படுகின்றனர் எனப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

*    நலத்துறையின் அரசின் முதலீடு குறைந்திருப்பதும் தனியார் நலவாழ்வு மையங்கள் ஆரோக்கியத்தை வழங்கும் முதன்மையான வாய்ப்பாக உருவெடுத்திருப்பதுமே இதற்கான காரணங்கள் ஆகும்.

*    எனினும், இந்தப் பிரச்சினைகளை யெல்லாம் சமாளிக்க, கடந்த மூன்று ஆண்டுகளில் அரசு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

*     தங்கள் சக்திக்கு உட்பட்ட வகையில், செலவு குறைந்த, சிறந்த தரமான மருத்துவச் சேவைகளை நோயாளர்கள் உலகெங்கிருந்தும் பெறுவதை நோக்கமாகக் கொண்ட புதிய தேசிய  நலக்கொள்கையை அரசு வகுத்துள்ளது.

*     மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவிகிதம் அளவுக்குக் குறித்தகால முறையில் ஆரோக்கியத்திற்கான பொதுச் செலவினத்தை உயர்த்துவதன் மூலம் பொதுநல முறையைப் பலப்படுத்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

*     மக்களின் நலவாழ்வில் ஏற்படும் பொருளாதாரச் சுமையைக் குறைப்பதற்காக, அனைத்துப் பொது மருத்துவமனைகளிலும் இலவச அவசரகாலச் சேவை, இலவச மருந்து களை வழங்குதல், இலவசமாக நோய் கண்டறிதல் ஆகியவற்றை அளிக்க இந்தக் கொள்கை முன்வந்துள்ளது.

*     நோயாளிகள் ஆயுஷ் நிலையங்களில் தாங்கள் விரும்பும் மருத்துவ முறையைத் தேர்வு செய்துகொள்ள இந்தக் கொள்கை உதவுகிறது.

*     சிறந்த ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, பள்ளிகளிலும் பணியிடங் களிலும் யோகா அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என அது கூறியுள்ளது.

*     மாவட்ட அளவிலான சேவைகளைப் பலப்படுத்த இந்தக் கொள்கை பரிந்துரைத்துள்ளது. அதன் விளைவாக, மக்கள் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளில் தான் என்றில்லாமல், மாவட்டத்திலேயே சிறந்த சிகிச்சை களைப் பெற்றிடலாம். தனியார் துறையினருடன் இணைந்து முன்னுணர்ந்து செயல்படவும் அது பரிந்துரைக்கிறது.

*     மருத்துவக் காப்பீடு ஒருங்கிணைப்பில் மேலும் அதிகமானவர்களைக் கொண்டு வந்து, மருந்துகளின் விலையையும் மருத்துவச் சாதனச் செலவையும் குறைக்கும் நடவடிக்கைகளை நலவாழ்வுக் காப்பீடு வகையில், அரசு ஏற்கெனவே தொடங்கியுள்ளது.

*    ஏறத்தாழ 500 மருந்துகளை நாடெங்கிலு முள்ள மாவட்ட அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கிடத் திட்ட மிடப்பட்டுள்ளது.

* ஆரம்பச் சுகாதார மையங்களில் இலவசமாக  50 அடிப்படை மருந்துகளும், சமுதாய நல்வாழ்வு மையங்களில் 300 மருந்துகளும் வழங்கப்படவுள்ளன. செலவு குறைந்த மருந்துகள் மற்றும் நம்பகமான உள்வைப்புச் சிகிச்சை  (அம்ரித்) திட்டத்தின்கீழ் 83 மையங்களை அரசு தொடங்கியுள்ளது.

*     கைபேசி மற்றும் இணையத் தொடர்பைச் சிறப்பாகப் பயன்படுத்தி, தரமான நலச் சேவைகளைப் பெறும் வகையில் குடிமக்களை ஆற்றல்படுத்தவும் அது திட்டமிட்டுள்ளது. நியாயமான செலவில் மருத்துவச் சேவையை அளிக்கும் நோக்கில் - அண்மையில் அசாம் மாநிலத்திற்குக் கிடைத்துள்ள ஒப்புதல் உட்பட -புதிய எய்ம்ஸ் நிலையங்களை அரசு தொடங்கியுள்ளது.

*     தங்கள் சக்திக்கு உகந்த மருத்துவச் சேவையை மக்கள் பெறவேண்டும் என்பதே இந்த அரசின் நோக்கம் ஆகும்.

*     தேசிய மருந்தாக்க விலைநிர்ணய ஆணையம் தனது விலைக் கட்டுப்பாட்டுப் பட்டியலில் மேலும் 30 அத்தியாவசியமான மருந்துகளைச் சேர்த்துக் கொண்டுள்ளது. இத்துடன் விலை கட்டுப்படுத்தப்படும் மருந்துகளின் மொத்த எண்ணிக்கை 760 ஆகிறது.

*     தேசிய மருத்துவச் சாதன வரைவுக் கொள்கை ஒன்று, பெரும்பாலான மருத்துவச் சாதனங்களை மருந்து ஒழுங்குமுறை அமைப்பின் கீழ் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

*     உள்ளூர் உற்பத்தியைப் பெருக்குவதற்கும் அது தன்னை ஆயத்தப் படுத்திக் கொண்டுள்ளது. தற்போது, ஒருசில முக்கிய மருத்துவச் சாதனங்கள் மட்டுமே மறைமுக விலைக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன.

*    அனைத்து மருத்துவச் சாதனங்களின் 80 சதவிகிதமும் இறக்குமதி செய்யப் பட்டவையே. மூட்டு அறுவைச் சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தப்படும் எலும்பு உள்வைப்புகளின் விலைகளுக்கு அரசு ஏற்கெனவே விலை உச்சவரம்பை நிர்ணயம் செய்துள்ளது. இது நோயாளிகளின் பணத்தில் நியாயமற்ற லாபவேட்டை நடைபெறுவதைத் தடுக்கிறது.

*    மேலும், மருந்துகள் என்ற பெயரில் அறியப்படும் மருத்துவச் சாதனங்கள் அதன் பொதிகளின் மீது உச்சபட்ச விலையைக் குறிப்பிட வேண்டும் எனத் தற்போது கூறப்பட்டுள்ளது.

*    மருந்துகள் மற்றும் அழகுச் சாதனங்கள் சட்டம், 1940 மற்றும் மருந்துகள் மற்றும் அழகுச் சாதனங்கள் விதிகள் 1945 ஆகியவற்றின் கீழ் 22 மருத்துவச் சாதனங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதய ஸ்டெண்டுகள், எலும்பு சிமெண்ட், இதய வால்வுகள் ஆகியவை இதில் அடங்கும்.

*     நிமோனியா மற்றும் மூளைச் சவ்வு வீக்கம் போன்ற நிமோனியா சார்ந்த நோய்களின் அபாயத்துக்கு எதிரான நிமோனியா தடுப்பூசி, ஹெபடைட்டிஸ் பி மற்றும் ஹெச் ஐ பி, டி.பி.டி என்னும் முத்தடுப்பூசி, ரோட்டோ வைரஸ் தடுப்பூசி, போலியோ தடுப்பூசி, ஐந்திறத்தடுப்பூசி ஆகிய பல்வேறு புதிய தடுப்பூசி களை உலகளாவிய நோய்த்தடுப்புத் திட்டத்தில் அரசு உள்ளடக்கியுள்ளது.

*     தனியார் துறையில் ஏற்கெனவே இந்தத் தடுப்பூசிகள் கிடைக்கின்றன. இவற்றைத் தேசியத் திட்டத்தில் உள்ளடக்குவதன் மூலம் அனைவருக்கும் சமமான முறையில் இவை கிடைப்பதை அரசு உத்தரவாதப்படுத்தியுள்ளது.

*     இந்திர தனுஷ் செயல்திட்டம் என்னும் அரசுத் திட்டம் ஒன்று 2014 டிசம்பர் 25-ஆம் தேதி தொடங்கப்பட்டு, ஆண்டுதோறும் சுமார் 5 சதவிகிதம் என்னும் அளவுக்கு 2014-இல் 65 சதவிகிதத்திலிருந்து ஐந்து ஆண்டுகளில் 90 சதவிகிதம் குழந்தைகளுக்கு முழு நோய்த்தடுப்பை உயர்த்தியுள்ளது.

*     மிகக் கடுமையான ஊட்டச்சத்தின்மை யால் பரவலாக நிலவும் பிரச்சினையைச் சமாளிப்பதற்காக நல்வாழ்வுத்துறை அமைச்சகம், தொடக்க நிலையிலேயே குழந்தைகள் மேம்பாட்டை உத்தரவாதப்படுத்துவதில் பெற்றோர்களின் பங்கை உணர்த்தும் நோக்குடன் முன்னணிப் பணியாளர்களுக்கு உதவுவதற்காக வழிகாட்டுதல்களையும் கருவித் தொகுப்புகளையும் வழங்கிச் செயல்படுகிறது.

*     மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகமும் ஊட்டச் சத்தின்மை பிரச்சினையைத் தீர்ப்பதற்கானபல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.



தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :