Add1
logo
Logo
ஓம்
பிப்ரவரி மாத ராசி பலன்கள்
 ................................................................
ஜோதி வடிவம் காட்டிய ஈசன்!
 ................................................................
யாதுமாகி நின்றாள்!
 ................................................................
கஜானன மஹராஜ்!
 ................................................................
கோடீஸ்வர யோகம் தரும் கோடங்குடி ஈசன்!
 ................................................................
மங்களம் வழங்கும் மகாசிவராத்திரி
 ................................................................
பிப்ரவரி மாத எண்ணியல் பலன்கள்
 ................................................................
பாண்டவர்கள் கட்டிய பஞ்ச கேதாரக் கோவில்கள்!
 ................................................................
பாவம் தீர்க்கும் முருகன் தலங்கள்!
 ................................................................
நட்சத்திர விழாக்களின் பயன்கள்!
 ................................................................
பல்வேறு நிலை சிவ வழிபாடு!
 ................................................................
துளசியின் மகிமை
 ................................................................
01-02-18மேஷம்

மேஷ ராசிநாதன் செவ்வாய் 7-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். அவரோடு பாக்கியாதிபதி குருவும் 7-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். எனவே இதுவொரு சிறப்பு. உங்களது திறமையும் செயல்பாடும் சிறப்பாக இயங்கும். நீண்டநாட்களாக தொழில்துறையில் கஷ்டங்களை அனுபவித்தவர்களுக்கு இனி நல்ல எதிர்காலமும் கடந்த சனிப்பெயர்ச்சி முதல் கண்ணுக்குத் தெரியும். உங்கள் கௌரவம் காப்பாற்றப்படும். மதிப்பு, மரியாதை, கீர்த்தி எல்லாம் கூடும். செயல்களில் வெற்றி கிடைக்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். இல்லத்தில் சுப நிகழ்வுகள் நடைபெறும் வாய்ப்புகள் உருவாகும். சகோதர- சகோதரி வகையில் ஏற்பட்ட பிணக்குகள் மாறி நல்லுறவு ஏற்படும். தாயின் உடல்நலத்தில் முன்னேற்றம் காணலாம். அலைச்சல்கள் குறையும். ஆதாயம் பெருகும். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். நல்ல வாய்ப்புகள் தேடிவரும்.

ரிஷபம்


ரிஷப ராசிநாதன் சுக்கிரன் இந்த மாத ஆரம்பத்தில் 10-ஆம் இடமான கும்பத்துக்கு மாறுகிறார். 10-ஆம் இடம் தொழில் ஸ்தானம். 2-க்குடைய புதனும் அவருடன் இணைகிறார். எனவே தொழில் சம்பந்தமான முயற்சிகளில் ஏற்பட்ட தேக்கங்கள் விலகும். அட்டமத்துச்சனி நடைபெற்றாலும் சனி ரிஷப ராசிக்கு ராஜயோகாதிபதி. எனவே பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தமாட்டார். வெளியூர் அல்லது வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்வோரின் திட்டங்கள் செயலாகும்.

அலைச்சல் திரிச்சல் அதிகமாகக் காணப்படும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். பொருளாதாரத்தில் உள்ள பற்றாக்குறை அகலும். தனகாரகன் தனஸ்தானத்தைப் பார்ப்பதால் தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் பொறுப்புகள் கூடும். சுமைகள் அதிகமாகும். உறவினர்களால் சற்று மனக்கசப்பு நேரும். எனவே விட்டுக்கொடுத்து அனுசரித்துச் செல்வதைக் கடைப்பிடிக்க வேண்டும்.

மிதுனம்


மிதுன ராசிநாதன் புதன் மாதத் தொடக்கத்தில் 8-ல் இருக்கிறார். 8-ஆம் தேதி 9-ஆம் இடத்துக்கு மாறுகிறார். அவருடன் 5, 12-க்குடைய சுக்கிரனும் இணைகிறார். புதனுக்கு வீடு கொடுத்த சனி 7-ல் அமர்ந்து ராசியைப் பார்க்கிறார். உங்களுடைய செயல்பாடுகளில் தாமதம், மந்தம் காணப்பட்டாலும் காரியங்களில் தடை ஏற்படாது. குரு 5-ல் அமர்ந்து ராசியைப் பார்ப்பதால் தடைகள் விலகி அனுகூலம் உண்டாகும். 2-ல் உள்ள ராகு பொருளாதாரத்தில் பல சிக்கல்களையும், குடும்பத்தில் குழப்பத்தையும் உண்டாக்குவார். பொறுமையையும் சகிப்புத் தன்மையையும் வளர்த்துக்கொள்வது அவசியம். வளர்ச்சியும் தளர்ச்சியும் மாறிமாறி வந்துகொண்டே இருக்கும். உழைப்பிற்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டியதாக இருக்கும். உடல்நலத்தில் அவ்வப்போது சிறுசிறு தொந்தரவுகள் வந்து விலகும். பெரியளவில் பாதிப்புக்கு இடமிருக்காது. வைத்தியச் செலவுகள் ஏற்படும். சிலருக்கு தாயார்வழியில் சில இழப்புகளைச் சந்திக்க நேரலாம். தொழில்துறைக்காக கடன் வாங்கும் அவசியம் ஏற்படும்.

கடகம்


கடக ராசிக்கு ஜென்மத்தில் ராகு நிற்கிறார். 7-ல் கேது நிற்கிறார். உடல் நலத்தில் சிறுசிறு சோர்வும், வேலைப்பளு காரணமாக அசதியும் வந்து விலகும். 5-ல் செவ்வாய் ஆட்சியாக இருக்கிறார். உங்களுடைய எண்ணங்களும் மனதில் உதித்த திட்டங்களும் செயல்பாடாக மாறி வெற்றியைத் தரும். என்றாலும் எதையும் சுலபமாக சாதித்து ஜெயிக்கமுடியாது. போராடி பிறகுதான் சாதிக்கமுடியும். 11-க்குடைய சுக்கிரன் 8-ல் மறைவதாலும், 12-க்குடைய புதன் அவருடன் இணைவதாலும் மேற்கண்ட பலன்களை அனுசரித்து செயல்பட வேண்டும். 6-ல் உள்ள சனி தொழில்வகையில் உள்ள போட்டி பொறாமைகளை அழிப்பார். கடன்கள் ஏற்பட்டாலும் அது சுபக்கடனாக மாறும் வழிகளும் தென்படும். பொருளாதாரத்தில் பற்றாக்குறை நிகழாது. அதேசமயம் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் காலதாமதம் ஏற்படலாம்.

சிம்மம்


சிம்ம ராசிநாதன் சூரியன் மாத முற்பகுதியில் 6-ல் இருக்கிறார். அவருடன் கேதுவும் சஞ்சாரம். கேது 6-ல் இருப்பது நல்லது என்றாலும், ராசிநாதன் 6-ல் மறைவது நல்லதல்ல. பொருளாதாரத்தில் தேக்கம், காரியத்தில் தடை ஆகியவற்றை சந்திக்க நேரும். 11-க்குடைய சுக்கிரன் 7-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். எனவே மலைபோல துன்பம் வந்தாலும் பனிபோல விலகிவிடும். மாதப் பிற்பகுதியில் சூரியன் 7-ல் நின்று ராசியைப் பார்ப்பார். உங்களுடைய தடைப்பட்ட காரியங்களும் செயல்களும் பூர்த்தியாகும். பிள்ளைகளைப் பற்றிய கவலை மனதில் இருந்தாலும், அதை வெளிக்காட்டாமல் சமாளிக்கும் திறனும் உண்டாகும். 5-ல் உள்ள சனியால் இந்தச் சங்கடங்களைச் சந்திக்க நேரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். குலதெய்வ வழிபாட்டில் குறையில்லாமல் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவது நல்லது. பூர்வீகச் சொத்துகள் சம்பந்தமாக சில வில்லங்கம், விவகாரம் உண்டாகலாம்.

கன்னி


கன்னி ராசிநாதன் புதன் 6-ல் மறைகிறார். பலமுறை கூறியதுபோல மற்ற கிரகங்களுக்கு மறைவு தோஷம்போல புதனுக்கு மறைவு தோஷம் பாதிக்காது. என்றாலும் 2-க்குடைய சுக்கிரனும் 6-ல் மறைவதால் பொருளாதாரத்தில் சிக்கல்களையும் சிரமங்களையும் சந்திக்கவேண்டிய சூழல் காணப்படலாம்.  குரு 2-ல் இருப்பதால் அதை சரிக்கட்டும் வழிகளும் தென்படலாம். 5-ல் உள்ள கேது பிள்ளைகள் வகையில் பிரச்சினைகளை உருவாக்கலாம். சிலர் பிள்ளைகளைவிட்டு தொலைவில் வசிக்கலாம். பிள்ளைகளைப் பற்றிய சிந்தனை கவலைகளை உண்டுபண்ணலாம். 3-க்குடைய செவ்வாய் 3-ல் ஆட்சி. உடன்பிறந்தவர்கள் மூலம் உதவியும் சகாயமும் உண்டாகும். சிலருக்கு உடல் ஆரோக்கியத்தில் நரம்பு சம்பந்தமான தொந்தரவுகள் ஏற்பட்டு வைத்தியச் செலவுகளை சந்திக்கலாம். தாயார்வகை உறவுகளால் சங்கடங்கள் நேரும். புதுமுயற்சிகளில் ஈடுபடுவதை ஒத்திவைக்கவும். கடன்களை சுபக்கடனாக மாற்ற வழிகளை உண்டாக்கிக் கொள்ளவும்.

துலாம்


துலா ராசிநாதன் சுக்கிரன் பிப்ரவரி 7-ஆம் தேதி 4-ஆமிடத்திலிருந்து 5-ஆம் இடத்துக்கு மாறுகிறார். ஜென்மத்தில் உள்ள குரு, சுக்கிரனைப் பார்க்கிறார். எனவே ராசிநாதனுக்கு குருபார்வை கிடைப்பது சிறப்பு. பிள்ளைகளுக்காக நீங்கள் எண்ணிய திட்டங்கள் செயல்வடிவம் பெறும். அவர்கள் வகையில் சுபச்செலவுகள் உருவாகலாம். திருமணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஆண்- பெண்களுக்குத் திருமண வாய்ப்பு ஏற்படும். பொருளாதாரப் பற்றாக்குறை, நெருக்கடி நிலைமாறி தாராள வரவு- செலவுகளை சந்திக்கலாம். தாயார் உடல்நலனில் சிறுசிறு மருத்துவச் செலவுகள் நேரலாம். உடன்பிறந்த சகோதரர்கள் அல்லது நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். புதிய தொழில்துறையில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். சிலருக்கு வீடு, மனை போன்றவற்றில் இடமாற்றங்கள் உண்டாகும். அது அனுகூலமான மாற்றமாகவும் அமையும். கோவில் திருப்பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பிரார்த்தனைகளை நிறைவேற்றலாம்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்கு ஏழரைச்சனியின் கடைசிக்கூறு பாதச்சனி நடைபெறுகிறது. விருச்சிக ராசிநாதன் செவ்வாய் ஜென்மத்தில் ஆட்சியாக இருக்கிறார். 2-ல் உள்ள சனி பொருளாதாரத் தேக்கத்தைக் கொடுத்தாலும், இரண்டாம் சுற்று மங்குனி நடப்பவர்களுக்கு நல்ல பலன்களே நடக்கும் என எதிர்பார்க்கலாம். பூர்வீக சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான பலன்கள் நடந்தாலும் செலவுகள் தவிர்க்கமுடியாததாக அமையும். சிலர் வேலையில் இடமாற்றத்தைச் சந்திக்கலாம். அது நல்லமாற்றமா இல்லையா என்பதை அனுபவரீதியாகத்தான் தெரிந்து கொள்ளமுடியும். இயற்கையில் சனி கெட்ட கிரகம் எனப்பட்டாலும், அவர் நியாயமான முறையில்தான் செயல்படுவார். அவரவர் வினைப்படிதான் பலன்கள் அமையும். அதில் நாம் நல்லவரா கெட்டவரா என்பதை நமது செயல்பாடும் எண்ணங்களும் முடிவு செய்யும். தெய்வத்தின்மேல் பாரத்தை இறக்கி வைத்துவிட்டு உங்கள் கடமைகளைச் செயலாற்றுங்கள். பலனை அவர் பார்த்துக்கொள்வார். தீதும் நன்றும் பிறர் தர வாராது.

தனுசு


தனுசு ராசிநாதன் குரு 11-ல் இருக்கிறார். மாத மத்தியில் அதிசாரமாக துலாத்திலிருந்து விருச்சிகத்திற்கு மாறுகிறார். தனாதிபதியாகவும் சகாய ஸ்தானாதிபதியாகவும் விளங்கும் சனி ஜென்மத்தில் இருக்கிறார். ஏழரைச் சனியில் ஜென்மச்சனி நடக்கிறது. தனவரவு பெருகும். மனக்குழப்பம் நீங்கும். 12-க்குடைய செவ்வாய் 12-ல் ஆட்சி. சிலர் வீடு மாற்றங்களைச் சந்திக்கலாம். வாடகை வீட்டில் இருந்து ஒத்திவீட்டுக்குக் குடிபோகலாம். ஒத்தி வீட்டில் இருப்பவர்கள் சொந்த வீட்டுக்கு மாறலாம். அதற்குண்டான வங்கிக்கடனும் வீட்டுக்கடனும் அமையும். உடல்நலத்தில் மட்டும் சிறுசிறு குறைபாடுகள் உண்டாகலாம். சிலருக்கு கால் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தொல்லைகளைத் தரலாம். பெரிய பாதிப்புகளுக்கு இடமில்லை. பயப்படத் தேவையில்லை. உடன்பிறந்த வகையில் கருத்து வேறுபாடுகள், தேவையற்ற மனக்குழப்பங்கள் ஏற்படலாம். பெரியோர்களிடையே இருந்த மனக்கசப்பு மாறும். வரவுக்கேற்ற செலவும் இருக்கும். தாய்மாமன் வழியில் அனுகூலமான பலன் களை சந்திக்கலாம்.

மகரம்


மகர ராசிக்கு ஏழரைச்சனியில் விரயச்சனி நடந்துகொண்டிருக்கிறது. ராசிநாதன் சனி என்ற அடிப்படையில் 12-ல் மறைந்தாலும், மகர ராசிக்கு ஏழரைச்சனி பாதிப்பை ஏற்படுத்தாது என்று நம்பலாம். ஜென்ம கேது அவ்வப்போது அலைக்கழிப்பை ஏற்படுத்தும். 7-ல் உள்ள ராகு கணவன்- மனைவிக்குள் சச்சரவு, பூசல் கருத்து வேற்றுமை போன்ற பலன்களைத் தருவார். 11-க்குடைய செவ்வாய் 11-ல் ஆட்சி. தொழில்துறையில் சில லாபகரமான முடிவுகள் ஏற்படும். 9-க்குடைய புதனும், 10-க்குடைய சுக்கிரனும் இணைந்து 2-ஆமிடத்தில் இருக்கின்றனர். எனவே தர்மகர்மாதிபதி யோகம் உங்களை வழிநடத்தும். தொழில், வருமானம் மூலம் பொருளாதாரத் தேவைகள் பூர்த்தியாகும். சிலர் வேலையில் இடமாற்றங்களைச் சந்தித்தாலும் அது திருப்திகரமானதாகவும் முன்னேற்றகரமானதாகவும் அமையப்பெறும். உடன்பிறந்தவர்களால் தொந்தரவுகள் உண்டாகும். தொழிலில் போட்டி, பொறாமைகள் காணப்படும். பைரவரை வழிபடவும்.

கும்பம்


கும்ப ராசிநாதன் சனி 11-ல் லாபஸ்தானத்தில் இருக்கிறார். 11-க்குடைய குரு 9-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். ஜென்ம ராசியில் சுக்கிரனும் புதனும் சேர்ந்திருக்கிறார்கள். தொழில்துறையில் நீங்கள் தொட்டது துலங்கும்; பட்டது துளிர்க்கும். குரு ராசியைப் பார்ப்பது ஒரு தனிச்சிறப்பு. உங்களுடைய திறமை, செயல், புகழ், கீர்த்தி யாவும் சிறப்பாக செயல்படும். மனதிலிருந்த இனம்புரியாத கவலை மாறும். யோகங்கள் வந்து சேரும். உடன்பிறந்த சகோதர- சகோதரிகளுக்கு நன்மையும் அனுகூலமும் ஏற்படும். கருத்து ஒற்றுமையும் உண்டாகும். பிள்ளைகளுக்கு சுபச்செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. இரும்பு, எந்திரம் சம்பந்தப்பட்ட தொழில்புரிவோருக்கு நல்ல லாபமும், தொழிலில் புதிய அணுகுமுறையும் கைகொடுக்கும். ராசிநாதனே ராசியைப் பார்ப்பது ஒரு தனி பலம். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். இல்லம் கட்டி குடியேறும் முயற்சிகள் பலன்தரும். மாத நடுவில் குரு அதிசாரமாக 10-ஆம் இடத்துக்கு மாறுவார். அக்காலம் குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படலாம்.

மீனம்


மீன ராசிநாதன் குரு 8-ல் இருக்கிறார். அவர் பிப்ரவரி 14-ஆம் தேதி அதிசாரமாக விருச்சிக ராசிக்கு மாறுவார். அக்காலம் உங்கள் ராசிக்கு குரு பார்வை கிடைக்கிறது. காரியதாமதம் விலகி காரியஜெயம் உண்டாகும். 10-ஆம் இடத்து சனி தொழில்துறையில் அனுகூலமான- லாபகரமான பலன்களைத் தருவார். 9-ல் செவ்வாய் ஆட்சி. வீடு, மனை, கட்டடம் சம்பந்தமான தொழில்புரிவோருக்கு நற்செய்திகளும் வருமானங்களும் அமையலாம். 2-ஆம் இடத்தை குரு பார்க்கிறார். தனகாரகன் தனஸ்தானத்தைப் பார்ப்பதால் பொருளாதாரத்தில் நெருக்கடி நிலை விலகும். கடைசி நேரத்தில்கூட தேவைகள் பூர்த்தியடையும். தாய்- தந்தையரின் உடல் நலத்தில் முன்னேற்றகரமான சூழல் தென்படும். வைத்தியச் செலவுகள் படிப்படியாகக் குறையும். சகோதர வர்க்கத்தில் பனிப்போர் நீடித்தாலும் பிரிவு, பிளவுக்கு இடம் ஏற்படாது. "விட்டுக்கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை' என்ற அடிப்படையில் பெருந்தன்மையாக சில விஷயங்களில் அனுசரித்துச் செல்வது நல்லது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :