Add1
logo
சிறப்பு செய்திகள்
முதல்வர் மோடியும் பிரதமர் மோடியும்!
 ................................................................
சும்மா இருந்த ஜீயரை, உசுப்பி விட்டது யாரு?
 ................................................................
இப்படியே போனா இந்தப் புதையல் சீக்கிரம் அழிஞ்சுரும்...
 ................................................................
போங்கப்பா, நீங்களும் ஒங்க பஸ்சும்!
 ................................................................
அனாதை பிணங்களை ஆதரித்த பெண்...
 ................................................................
ஆண்டாள் பாசுரத்தையே உணராத ஜீயர்
 ................................................................
பாகிஸ்தான் பிரிவினை வரலாறு மோடிக்கு
 ................................................................
பொது இடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள்...
 ................................................................
தமிழ் சினிமா தவறியது, இந்தி சினிமா செய்தது!
 ................................................................
கத்திப் பேசினால் உண்மையாகிடுமா மோடி?
 ................................................................
ஓபிஎஸ் செய்த தர்மயுத்தம்?!
 ................................................................
ஆசிரமத்தில் சேரும் பெண்களிடம் ஆபாச ஒப்பந்தம்!
 ................................................................
முக்கால்வாசி இந்தியர்களின் வேலை பறிபோகிறது?
 ................................................................
நிலவைத் தொட்டது ஆர்ம்ஸ்ட்ராங், நாப்கினைத் தொட்டது நான்!
 ................................................................
அடுத்த தலைமுறைக்கான இளைஞர் படை ரெடி!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 9, பிப்ரவரி 2018 (11:28 IST)
மாற்றம் செய்த நாள் :9, பிப்ரவரி 2018 (11:28 IST)

போங்கப்பா, நீங்களும் ஒங்க பஸ்சும்! 

ஒரே வாரத்தில் 8 லட்சம் பேர் பஸ்சை கைவிட்டு மின்சார ரயிலுக்கு மாறியிருக்காங்கன்னா அரசு கொஞ்சமாச்சும் அவுங்க கஷ்டத்தை புரிஞ்சுக்க வேணாமா.

சும்மா இல்லங்க, ஒரே வாரத்துல புறநகர் ரயில் போக்குவரத்துக்கு 2 கோடி ரூபாய் அதிகமா வருவாய் கிடைச்சிருக்கு. அப்படின்னா, பேருந்து போக்குவரத்துத் துறைக்கு எவ்வளவு நஷ்டம்னு யூகிச்சு பாருங்க. இந்தக் கணக்கு ஜனவரி 20 முதல் 26 ஆம் தேதி வரையிலான 7 நாட்கள் மட்டும்தான். அப்படியானால், இன்னமும் பேருந்து போக்குவரத்துக்கு மக்கள் மாறவில்லையா? 

நிச்சயமாக மாறமாட்டார்கள். மாதாந்திர சேமிப்பை, அல்லது செலவை ஈடுகட்ட மக்களுக்கு வேறு வழியில்லை என்கிறார்கள். தி.நகரிலிருந்து தாம்பரத்திற்கு பேருந்தில் போய்வர பேருந்துக் கட்டணம் 40 முதல் 50 ரூபாய் வரை ஆகிறது. இதுவே ரயிலில் வெறும் 10 ரூபாய் மட்டுமே போதும்.. சேமிப்போடு, விரைவாகவும் போய் வரமுடிகிறது என்கிறார் ஒரு பயணி. 

சில பயணிகள் மூன்று பஸ்கள் மாறி பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அவர்கள் இப்போது புதிய வழியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். சைக்கிள் பயணமே அவர்களுக்கு எளிதாக இருப்பதாக உணரத் தொடங்கியுள்ளனர். சென்னை மாநகராட்சியும் சில உருப்படியான யோசனைகளை செயல்படுத்த திட்டமிட்டிருக்கிறது என்கிறார்கள். முக்கியமான மையங்களில் சைக்கிள் பரிமாற்றங்களுக்கு டென்டர் கோரியிருக்கிறது. முதல்கட்டமாக தேனாம்பேட்டை மற்றும் கோடம்பாக்கம் மையங்களை குறிவைத்து 5 ஆயிரம் சைக்கிள்களை இயக்க டென்டர் கோரியிருக்கிறது. இந்த சைக்கிள்களை மாநகராட்சிக்குள் 400 இடங்களில் நிறுத்தியும் திரும்ப எடுத்தும் பயணிக்க முடியும் என்கிறார்கள் அதிகாரிகள். 

இது இப்படி இருக்க, போக்குவரத்துத் துறை அதிகாரிகள், விரைவில் பயணிகள் பேருந்துக்கு திரும்ப வருவார்கள் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். பயணிகள் வசதிக்காக சாதாரண பேருந்துகளை அதிகமாக இயக்கப்போவதாக அவர்கள் கூறினர். 

எது எப்படியோ, பயணிகள் சைக்கிளையும் ரயிலையும் தேர்வு செய்யத் தொடங்கிவிட்ட நிலையில், மீண்டும் மாநகர ஓட்டை உடைசல் பஸ்களுக்கு டிக்கெட் தெண்டம் கட்ட தயாராக இல்லை என்பதை வெளிப்படுத்தி விட்டார்கள் என்றே தெரிகிறது.

- ஆதனூர் சோழன்
(ஆதாரம் - தி ஹிண்டு)

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(4)
Name : முஹம்மது அயூப் கே Country : United Arab Emirates Date :2/10/2018 11:44:58 AM
//பயணிகள் வசதிக்காக சாதாரண பேருந்துகளை அதிகமாக இயக்கப்போவதாக அவர்கள் கூறினர். // என்னது சாதாரண பஸ்ஸா ? இப்போ மட்டும் என்ன வொல்வோ பஸ்ஸா ஓடுது ? சாதாரண பஸ்ஸுன்னு மாட்டு வண்டியை சொல்றாங்க போல.
Name : ராஜகோபாலன். Country : India Date :2/10/2018 10:46:20 AM
சென்னை மாநகராட்சியும் சில உருப்படியான யோசனைகளை செயல்படுத்த திட்டமிட்டிருக்கிறது என்பது மகா மட்டமான பேத்தல்..!!! அதிமுக / பாஜக கட்சியின் நோக்கமே கொள்ளை அடிப்பது தான் ...!!! கொள்ளை அடிப்பதற்காகவே சில பல திட்டங்களை எமர்ஜன்சி கால நடவடிக்கையை போல... இவர்களே தோற்றுவித்து..., இவர்களே கொண்டு வருவார்கள்..!!! தெர்மோகோளில் 10 லட்சம் சுருட்டியது போல... இதுவும் ஒன்று...!!! நாமத்தை சாத்த... சாத்த... எப்படித்தான் ஏமாற தோன்றுகிறதோ தெரியவில்லை...??? அப்படியே ..., ஜால்றா அடித்துக்கொண்டு நாட்டை சூறையாட வழி செய்யுங்கள்...!? பணம் இல்லை... எம்ஜி யாருக்கு சாவு கூத்து!? பணம் இல்லை... சைக்கிள் வாங்க திட்டம்?! தமிழர்கள் இன்னும் நன்றாக வருபடவேண்டும். சினிமா நடிகை புகழ் விஜயேந்திரனும்... சோடா பாட்டில் சடகோப ராமானுஜனும்... எச்ச ராஜாவும் நீச்சத்தனமாக கடவுள் பெயரால், தமிழர்களை திசை திருப்ப... இடைவெளியில், கொலைகார பாஜக திட்டமிட்டு, தமிழை அழிக்கிறது. தமிழர்களை ஒழிக்கிறது. ஈழத்தின் நிலை தமிழகத்தில் வேரூன்ற ஆரம்பித்து விட்டது..... பொதுவாக எம் கணக்கு தவறுவதில்லை. ஈழத்தின் நிலை தமிழகத்தில் வேரூன்ற ஆரம்பித்து விட்டது.....
Name : R,Nadarajah switzerland Country : Switzerland Date :2/10/2018 4:25:59 AM
மிகவும் மகிழ்ச்சியான செய்தி உடம்புக்கு ஆரோக்கியம் விபத்து குறைவு மக்களே பஸ் பக்கம் திரும்பியும் பார்க்காதீர்கள்
Name : ராஜகோபாலன். Date :2/9/2018 3:39:13 PM