Skip to main content
சற்று முன்

மீண்டும் ஆர்ஜே(RJ) கதாபாத்திரத்தில் வித்யா பாலன்

மீண்டும் ஆர்ஜே(RJ) கதாபாத்திரத்தில் வித்யா பாலன்

vithcinema
விக்கி
Sr.Editor
Submitted by acoadio on 28 October 2017

அறிமுக இயக்குனர் சுரேஷ் த்ரிவேணி  இயக்கத்தில் வித்யா பாலன் நடிப்பில் நவம்பர் 17 வெளிவரவிருக்கும் திரைப்படம் தும்ஹாரி சுலு. இப்படத்தில் திருமணமான நடுத்தர பெண்ணாக நடித்துள்ளார் வித்யா பாலன். இல்லத்தரசியாக இருந்துகொண்டு ரேடியோ ஜாக்கி ஆக வேண்டும் என்பதில் குறிக்கோளாக இருக்கிறார். பின்னர் இரவில் பேசும் கவர்ச்சியான ரேடியோ ஜாக்கி ஆக தன்னுடைய பணியை தொடங்குகிறார் வித்யா பாலன்.

வித்யா பாலனின் குரலும், நகைச்சுவையும் அந்த நிகழ்ச்சியை வெற்றியடைய செய்ய வைக்கிறது. கை  போ ச்சே(Kai Po Che), சிட்டி லைட்ஸ்( CityLights) போன்ற படங்களில் நடித்த மாணவ் கவுல்(Manav Kaul) வித்யா பாலனின் கணவராக நடித்துள்ளார். வித்யா பாலன் வேலை செய்யும் அலுவலகத்தின் தலைமை பொறுப்பாளராக நேகா துபியா நடித்திருக்கிறார்.

தும்ஹாரி சுலு படத்தில் வித்யா பாலன் தன் குடும்ப வாழ்க்கையையும், வேலையையும் எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் கரு. இப்படத்தின் படப்பிடிப்பு வெறும் 42 நாட்களில் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது.

மிஸ்டர் இந்தியா (Mr.india)  படத்தில் இடம்பெற்ற  ஹவா ஹவாய்(Hawa Hawaai) என்ற பாடல் 80 கால கட்டத்தில் மிகவும் பிரபலமான ஒன்றாக பேசப்பட்டது. தற்போது தும்ஹாரி சுலு படத்தில் மீண்டும் இப்பாடலை உருவாக்கியுள்ளனர். 

இதுபற்றி வித்யா பாலன் கூறுகையில், ஸ்ரீதேவி அவர்களுக்கும், ஹவா ஹவாய் பாடலுக்கும் நன்றி செலுத்தும் விதமாக மீண்டும் உருவாக்கம் செய்துள்ளோம் என்று குறிப்பிட்டார்.

லகே  ரஹோ முன்னா  பாய் (Lage Raho Munna Bhai) படத்திற்கு பிறகு மீண்டும் ரேடியோ ஜாக்கி ஆக வித்யாவை பார்க்க இருக்கிறோம். தும்ஹாரி சுலு படத்திற்காக சில பாடங்களை 'ஆர்ஜே மலிஷ்காவிடம்' இருந்து கற்றுக்கொண்டுள்ளார் வித்யா பாலன். ஆர்ஜே மலிஷ்காவும் இப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.