Skip to main content
சற்று முன்

கட்டலோனியா அரசைக் கலைக்க ஸ்பெயின் முடிவு?

கட்டலோனியா அரசைக் கலைக்க ஸ்பெயின் முடிவு?

spain
விக்கி
Sr.Editor
Submitted by acoadio on 25 October 2017

ஸ்பெயின் நாட்டின் ஒரு பகுதியான கட்டலோனியா, தனி நாடு கோரிக்கையை முன்வைத்துவரும் வேளையில், அந்நாட்டின் அரசைக் கலைத்துவிட்டு மறுதேர்தல் நடத்துவதுகுறித்து ஸ்பெயின் அரசு ஆலோசனை நடத்திவருகிறது.

ஸ்பெயின் நாட்டில் வளம் மிகுந்த பகுதியான கட்டலோனியா, தொடர்ந்து தனிநாடு கோரிக்கையை வைத்துவந்தது. ஸ்பெயின் நாட்டின் பொருளாதாரத்தில் ஐந்தில் ஒரு பங்கு, கட்டலோனியா பகுதியிலிருந்து கிடைக்கிறது. ஸ்பெயின் அரசாங்கம், இவர்களது கோரிக்கையை நிராகரித்துவந்தது. இந்நிலையில், கட்டலோனிய மாநில அரசு, தனிநாடுகுறித்து  ஸ்பெயினின் தடையையும் மீறி பொது வாக்கெடுப்பு நடத்தியது. ஆனால், இந்த வாக்கெடுப்பில், ஸ்பெயின் அரசு காவல்துறைமூலம் முடக்க, வாக்களிக்க வந்தவர்கள்மீது தாக்குதல் நடத்தியது. வாக்கெடுப்பில், 90 சதவிகித கட்டலோனிய மக்கள், தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக அந்த மாநில அரசு தெரிவித்து, தனிநாடு வாக்கெடுப்பில் வெற்றிபெற்றுள்ளதாகவும் அறிவித்தது.

இந்நிலையில், ஸ்பெயின் பாராளுமன்றத்தில் நேற்று நடந்த கூட்டத்தில் பேசிய அந்நாட்டு பிரதமர் மரியானோ ரஜாய், “கட்டலோனியா தனி நாடாகப் பிரிவதுகுறித்த முடிவை இன்னும் ஐந்து நாள்களில் உறுதியாகத் தெரியப்படுத்த வேண்டும். வரும் 19-ம் தேதி காலை 10 மணிக்குள் கட்டலோனியா தனது முடிவை ஸ்பெயின் மக்களுக்கு அறிவிக்க வேண்டும்’ எனக் கூறினார்.