Skip to main content
சற்று முன்

உலக வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் போர்கள் - டாப் 14 !

உலக வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் போர்கள் - டாப் 14 !

war
விக்கி
Sr.Editor
Submitted by acoadio on 28 October 2017

குருஷேத்திர போரில் இருந்து கார்கில் போர் வரை... மனிதர்களின் நில ஆக்கிரமிப்பு சார்ந்த சண்டைகளும், போர்களும், அதன்பால் ஏற்படும் அப்பாவி மக்களின் உயிரிழப்பும் குறையவே இல்லை. உலகில் பல மாற்றங்களை ஏற்படுத்திய போர்கள் இருக்கின்றன. தலைகனத்தால் நிலம் இழந்த கதைகள் பலவனவும் நாம் இந்த போர் முடிவுகளில் தான் கண்டுள்ளோம்.

490 கி.மு. துவங்கி கி.பி 1943 வரையிலும் நடந்த பல போர்கள் உலகின் தலைசிறந்த போர்கள் என்ற பட்டியலில் இடம்பெற்றுள்ளன. எண்ணிக்கை அளவில் குறைவாக இருந்தாலும், பெரும் படைகளை தங்கள் யுக்திகளால் வீழ்த்திய படைகளும் இருந்துள்ளன, ஏறும்பு போன்ற எதிரி நாடுகளை நசுக்கு வீழ்த்திய படைகளும் இருந்துள்ளன...

#14 மராத்தான் போர் (490 கி.மு.) உலக வரலாற்றில் பதிவான ஆரம்பக் கால போர். முதலாம் பெர்ஷியர்கள் கிரீஸ் மீது தொடுத்த போர். ஏறத்தாழ பெரிஷியாவின் இருபதாயிரம் காலாற்படை மற்றும் குதிரைப்படை ஏதென்வாசிகளை நசுக்க மேற்கொண்ட போர். இந்த போரில் கிரேக்கர்கள் தான் வெற்றி பெற்றனர். இதன் பின்னரே ஐரோப்பிய கலாச்சாரம் மேம்பட ஆரம்பித்தது.
 

#13 தெர்மோபைலே போர் (480 கி.மு.) தோல்வியுற்ற பத்தே ஆண்டுகளில் மீண்டும் போருக்கு தயாராகினர் பெர்ஷியர்கள். இம்முறை தனது படையை இன்னும் பன்மடங்கு அதிகரித்து போருக்கு தயாராகினர். 70,000 முதல் 1,50,000 என்ற கணக்கில் காலாற்படை திரட்டி போரிட சென்றனர். கிரேக்கத்தை, சிறந்த அரசனான லியோநிடஸ் (Leonidas) தான் தலைமை தாங்கினார். வியக்க வைத்த இந்த போரில் கிரேக்கர்கள் மீண்டும் தங்கள் ஆதிக்கத்தை நிரூபித்தனர். வரலாற்றில் பெரும் சுவடை பதித்தது இந்த வெற்றி. தனது மண்ணை தற்காத்துக் கொள்ள எந்த அளவிற்கு ஒரு வீரன் போராட வேண்டும் என்பதற்கு இந்த போர் எடுத்துக்காட்டாக அமைந்தது.
 

#12 ககமெலேல போர் (கிமு 331) அர்பெலா போர் என்றும் அழைக்கப்படுகிறது இந்த ககமெலேல போர். அலக்சாண்டர் தி கிரேட் மற்றும் பெர்ஷியாவின் மூன்றாம் டேரியஸ் என்ற அரசனுக்கும் நடந்த போர். இன்றைய ஈராக் பகுதியில் இந்த போர் நடந்தது. ஒரு இலட்சம் பெர்ஷியர்கள் நாற்பது ஆயிரம் கூர்நித் குழு வீரர்களை எதிர்கொண்டனர். அலக்சாண்டர் தனது சிறந்த போர் யுக்திகள் மூலம் பெரும் வெற்றி பெற்றார். இந்த வெற்றிக்கு பிறகு தான் அலக்சாண்டர் ஆசியாவின் பேரரசாக உருவெடுத்தார்.

#11 மெட்டாரஸ் (Metaurus) போர் (கிமு 147) மெட்டாரஸ் போர் , ரோம் மற்றும் கார்தேஜிற்கு நடுவே நடந்த இரண்டாவது பியூனிக் போர். மத்திய தரைக்கடல் பகுதியை சேர்ந்த இரண்டு சக்தி வாய்ந்த பண்டையக் காலத்தினர் இதில் மோதிக் கொண்டனர். இரு படைகளுமே சக்தி, யுக்தி, வலிமை என ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் இல்லை. ஆள் படையில் மட்டும் ரோமானியர்கள் அதிகமாக இருந்தானர். மேலும், இவர்கள் போரில் யானைகளை பயன்படுத்தினர். இதன் காரணத்தால் போரில் இவர்கள் வெற்றி பெற்றனர்.
 

#10 காய்சியா (Gaixia) போர் (கிமு 142) பண்டைய காலத்து சீனாவில் நடந்த முக்கியமான போர் காய்சியா. ஹான் ராஜ்ஜியம் உருவாக்கத்திற்கு அடித்தளமாக அமைந்த போர் இது. இதில் க்ஸியாங் யூ ஆர்மி காய்சியாவின் ஆர்மியால் பத்து புறங்களில் சுற்றி நின்று தாக்குதலுக்கு உண்டானது. இந்த போரில் க்ஸியாங் யூ ஆர்மியை சேர்ந்த ஒரு இலட்சம் பேர் உயிரிழந்தனர்.
 

#09 தேடூபூர்க் வனப்பகுதி போர் (9 கி.பி.) ரோமானியர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஜெர்மனியாவில் இந்த போர் நடந்தது. பண்டையக் காலத்தில் நடந்த பிரபலமான போர்களில் இதுவும் இன்று. ஜெர்மானிய பழங்குடி மக்களை அர்மைன்ஸ் தலைமை தாங்கி இந்த போரை நடத்தினார். இந்த போரில் ரோமின் மூன்று படைகள் தோல்வியை தழுவின.இதனால் ஜெர்மானியா தொடர்ந்து சுதந்திர நாடாக திகழ்ந்தது. இதனாலேயே இந்த போர் நடந்த தேடூபூர்க் வனப்பகுதி இன்றுவரையும் ஜெர்மனியின் தேசிய சின்னமாக இருக்கிறது.

#08 டூர்ஸ் போர் (732) பாய்டியர்ஸ் போர் என்றும் அழைக்கப்படும் இந்த போரில் பிராங்கிஷ்'ஐ தலைமை ஏற்ற தலைவர் சார்லஸ் மேர்டல் மற்றும் இஸ்லாமிக்கை தலைமை ஏற்ற எமீர் அப்துல் ரஹ்மான் அல் காபிகி இருவருக்கும் நடுவில் போர் நடந்தது. இதில் பிராங்கிஷ் படை இஸ்லாமிக் படையை தோற்கடித்தது.
 

#07 ஹேஸ்டிங்ஸ் போர் (1066) ஆங்கிலேயர்கள் வரலாற்றில் முக்கியமான போராக அமைந்தது இந்த ஹேஸ்டிங்ஸ் போர் . பிரான்சை சேர்ந்த வில்லியம் நார்மாண்டி மற்றும் இரண்டாம் ஹரோல்ட் அரசனுக்கும் இடையே இந்த போர் நிகழ்ந்தது. நார்மான்ஸ் எனப்படும் வில்லியம் நார்மாண்டியின் படை மிகவும் திறமை பெற்றவர்கள். இதன் காரணமாக இவர் இந்த போரில் வெற்றிபெற்றனர். இதனால் 600ஆண்டுகளாக ஆண்டு வந்த பகுதியை இழந்தார்கள். இதன் பிறகே நார்மன்களின் வெற்றி பயணம் துவங்கியது.
 

#06 மோர்கார்டன் போர் (1314) நவம்பர் 1314ல் நடந்த போர். சுவிஸ்-ன் 1400 பேர் கொண்ட வலிமையான படையும், தன்னை விட பெரிய ஆஸ்திரிய படையை (9000) எதிர்த்து போர். ஆஸ்திரியர்கள் கருவிகள் கையாள தெரிந்தவர்கள். ஆனால், அச்சமற்ற தைரியசாளிகலான சுவிஸ் வீரர்கள் தங்கள் எதிரிகளை கற்கள், மரத்துண்டுகள் கொண்டு அடித்து போராடினர்.
 

#05 ஸ்பானிஷ் ஆர்மடாவின் தோல்வி (1488) ஸ்பானிஷ் ஆர்மடாவின் தோல்வி ஆங்கிலேய வரலாற்றில் ஒரு புரபலமான நிகழ்வு.16ம் நூற்றாண்டில் ஸ்பெயின் உலகின் சக்தி வாய்ந்த நாடாக இருந்தது. உலகெங்கிலும் பல நாடுகளை கைப்பற்றி ஆட்சி செய்து வந்தது. அப்போது இங்கிலாந்து கொஞ்சம் நண்பர்களும், நிறைய எதிரிகளும் கொண்டிருந்தது. கிட்டத்தட்ட ஸ்பெயின் 130 கப்பல்களை கொண்டு போரிட்டது. டச்சு இராணுவத்தின் உதவியோடு ஆங்கிலேயர்கள் ஸ்பெயினை தோற்கடித்து வரலாற்றை மாற்றி எழுதினர்.
 

#04 வியன்னா போர் (1683) வியன்னாவின் "Kahlenberg" எனும் மலை அருகே தான் இந்த போர் நடந்தது. வரலாற்றில் நடந்த ஒரு மிகப்பெரிய போர் இது. ஐரோப்பிய வரலாற்றில் முக்கிய பங்கு வகித்தது. ஏறத்தாழ இரண்டு மாதங்கள் நீடித்த இந்த போரில் ரோம பேரரசு, துருக்கியர்களுடன் (Ottomans) மோதியது. 90,000 போர் வீரர்கள் கொண்ட ஐரோப்பிய இராணுவம், 1,40,000 போர் வீரர்கள் கொண்ட துருக்கிய இராணுவத்துடன் மோதி வெற்றிக் கொண்டது.
 

#03 சரடோகா யுத்தங்கள் (1777) அமெரிக்காவின் ஒரு புரட்சிகரமான போர் இது. இதில் பிரிட்டிஷை தோற்கடித்தது அமெரிக்கா. நியூயார்க்கில் இருந்து ஒன்பது மைல் தொலைவில் தான் இந்த போர் நடந்தது. இதில் 8000 பிரிட்டிஷ் வீரர்கள் பங்கெடுத்து கொண்டனர். நாளுக்கு, நாள் அமெரிக்காவின் படை விரிவடைந்து கொண்டே போனது தான் அமெரிக்காவின்வெற்றிக்கு வித்திட்டது. இந்த வெற்றியின் மூலமாக தான் அமெரிக்கா சர்வதேச அளவில் தனது சக்தியை வெளிகாட்டியது.
 

#02 யார்க் டவுன் போர் (1781) சரடோகா போருக்கு பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து மீண்டும் அமெரிக்காவும், பிரிட்டிஷ்'ம் நேருக்கு, நேர் மோதிய போர் இது. அமெரிக்காவின் புரட்சிக்கு முக்கியமான போராக இது அமைந்தது. அமெரிக்க படைக்கு நான்காயிரம் பிரெஞ்சு வீரர்கள் உதவினர். இந்த கூட்டு முயற்சியின் பலனாக அமெரிக்கா மீண்டும் வெற்றி பெற்றது.
 

#01 ஸ்டாலின்கிராட் போர் (1942-1943) வரலாற்றில் பெரும் உயிர்சேதம் கொண்ட மாபெரும் போர்களம் ஸ்டாலின்கிராட் போர். ஜெர்மனியின் நாசி படை மற்றும் சோவியத் யூனியன் இடையே நடந்த மோதல். இரண்டாம் உலகப்போரில் திருப்புமுனையாக அமைந்த போர் இது என வரலாற்று ஆர்வலர்கள் கூறுகிறார்கள். ரஷ்யாவில் குளிர் காலத்தில் நடந்த இந்த போரின் போது ஜெர்மன் படை முற்றிலும் தனது வலுவை இழந்தது. ஹிட்லரின் படை மிகவும் மோசமானது. ஹிட்லருக்கு இது தேவையற்ற போர் என்றும் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.